Thursday, November 22, 2012

தசாவதாரம் உணர்த்தும் கூர்ப்பு கொள்கை


விஷ்ணுவின்  முதல் அவதாரம் மச்ச அவதாரம்.  உலகின் முதல் உயிர் வாழ்க்கை நீரிலேயே  உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது 

இரண்டாவது   கூர்ம  அவதாரம், கூர்மம்  என்றால்  ஆமை. ஆமையானது  நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இது உயிர் வாழ்க்கையானது நீரில் இருந்து நிலத்திற்கு பரவியமையைக்  காட்டுகிறது .

மூன்றாவது   வராகம். அதாவது பன்றி அவதாரம். இது உயிரினங்கள் நீரிலிருந்து முற்றும் முழுதாக நிலத்தில் வாழ இயைபாக்கம் அடைந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது.

நான்காவது நரசிம்மம். இது அரை மனித அரை மிருக உருவமாகும். இது உடல் ரீதியாக விலங்கு நிலையில் இருந்து மனித உருவமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை எடுத்துக்காட்டுகிறது.

ஐந்தாவது வாமன அவதாரம். இது குள்ள மனித அவதாரம். இது மிருக சுபாவம் கொண்ட மனித உருவத்தில் இருந்து புத்தி கூர்மை உள்ள மனித இனமாக மாறிய நிலையை உணர்த்துகிறது. 

ஆறாவது பரசுராம அவதாரம். அவர் கையில் கோடரி கானப்படுகிறது . 
 இது காடுகளில்  மிருகங்களை  வேட்டை ஆடித்திரிந்த மனித நாகரீகத்தின் படி நிலையை  பிரதிபலிகிறது.

ஏழாவது ராம அவதாரம்.  மனித மேம்பாட்டின்  அடுத்த படி நிலையாக மனிதன் ஆயுதங்களை உருவாக்கப் பழகிக்   கொண்ட நிலையையும், கிராமங்கள் மற்றும் சமூகக்  கட்டமைப்புகள் உருவாகத் தொடங்கிய நிலையையும் உணர்த்துகிறது.

எட்டாவது பலசுராம அவதாரம். அதில் பரசுராமர் கலைப்பையுடன்  காணப்படுகிறார். இது மனித நாகரீகத்தில் விவசாய அபிவிருத்தி ஏற்பட்டதைக்  காட்டுகிறது.

ஒன்பதாவது கிருஷ்ண அவதாரம். அதில் கிருஷ்ண பகவான்  பசுக்களுடன் காணப்படுகிறார். அது மனிதன் மிருகங்களை வீட்டுத்தேவைகளுக்காக   பயன்படுத்தத் தொடங்கியமையையும்,  கால் நடை வளர்ப்பை மேற்கொண்டமையையும் , அன்று நிலவிய பொருளாதார மேம்பாட்டையும் காட்டுகின்றது.

இறுதியாக அதாவது பத்தாவது அவதாரமாக நாம் எதிர்பார்த்திருப்பது   கல்கி  அவதாரம். இதில் கல்கி பகவான் தேவதாதி என்னும் வேகமான  குதிரையில் வந்து  உலகை அழிப்பார் என நம்பப்படுகிறது. இன்று இடம்பெரும் இயற்கை அழிவுகளும் மனிதனால் மேற்கொள்ளப்டும் அழிவை நோக்கிய செயற்பாடுகளும்  இதற்கான அறிகுறிகளாக இருக்கின்றன.  

Tuesday, October 30, 2012

இந்து சமயத்தில் வெற்றிலை முக்கியத்துவம் பெறுவது ஏன் ?

வெற்றிலை முதலில் இமையமலைப் பகுதியிலேயே உருவாகியதாகக் கூறப்படுகிறது. சிவனும் பார்வதியுமே அவற்றை அங்கு விதைத்ததாக ஒரு கதை உண்டு. அது மாத்திரமன்றி தேவர்கள் அமுதத்தை பெற வேண்டி பாற்கடலை கடைந்த வேளை அவர்களுக்கு கடவுளால் வெற்றிலை வழங்கப்பட்டதாக கந்த புராணம் கூறுகிறது.
அத்துடன் வெற்றிலையின் வெவேறு பகுதிகளில் வெவ்வேறு தெய்வங்கள் உறைவதாக ஐதிகம் உண்டு .

அவ்வகையில்..
இந்திரன், சுக்கிரன் மேல் பகுதியிலும்
சரஸ்வதி மத்திய பகுதியிலும்
மகா லக்க்ஷ்மி கீழ்ப் பகுதியிலும்
ஜேஸ்த லக்க்ஷ்மி முனைப் பகுதியிலும்
பார்வதி, மாங்கல்ய தேவி இடது பக்கத்திலும்
பூமாதேவி வலது பக்கத்திலும்
விஷ்ணு உட்புறமாகவும்
சிவன் வெளிப்புறமாகவும்
சூரியன் பரவலாகவும்
காமதேவன் வெளிப்பகுதியிலும் உறைவதாக நம்பிக்கை உண்டு.
இதனாலேயே அஷ்ட மாங்கல்ய பொருட்களில் வெற்றிலை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஓட்டை விழுந்த , கிழிந்த மற்றும் காய்ந்த இலைகள் பூசைக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

அது மாத்திரம் அன்றி அமது இந்து மதத்தில் பயன்படுத்தப்படும் ஏனைய புண்ணியப் பொருட்களைப் போன்று வெற்றிலையும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.
அது விற்றமின் எ(A), சி(C) மற்றும் கல்சியம் நிறைந்தது. வாயை சுத்தமாக வைத்து கொள்ள உதவுவதுடன் புற்று நோய், ஒச்தியோ புரோசிஸ், சளி, இருமல் மற்றும் சமிபாட்டின்மை போன்றவற்றிற்கு சிறந்த நோய் நிவாரணி ஆகவும் விளங்குகிறது.

Friday, October 26, 2012

ஆண்கள் கோயிலுக்கு செல்லும் போது மேல் சட்டையை(Shirt) அகற்றுவது ஏன்?

நம்மிடையே நிலவும் அநேக வழக்கங்களுக்கு எம்மால் சரியான காரணத்தை பெரும்பாலும் கூற  முடிவதில்லை.  அதற்காக அவற்றை பழமை வாதம்  என்று வெறுமனவே  ஒதுக்கி விட முடியாது. ஆராய்ந்து பார்க்கும் போது அவற்றிற்கு பல  காரணங்களைப்  பெற்றுக் கொள்ள முடியும்.  

நாம் மரியாதை வைத்திருப்பவர்களுக்கு    எமது பணிவை காட்டும் நோக்கில் ஆண்கள் மேல் சட்டையை  அகற்றும்  வழமை குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றும் இருக்கிறது. அவ்வகையில் கடவுளுக்கு எமது மரியாதையை செலுத்தும் முகமாக இவ்வாறு செய்யும் வழமை  இருந்திருக்கலாம்.   இதை மேலை நாடுகளில் தொப்பியை கழற்றி (hats off) மரியாதையை செய்வதற்கு ஒப்பாக கொள்ளலாம்.

உடலில் ஏழு சக்கரங்கள் காணப்படுகிறது. அவ்ற்றின் ஊடாகவே குண்டலினி சக்தி(human energy field 'Aura') விநியோகிக்கபடுகிறது. நாம் விக்ரகங்களின்  முன் நிற்கும் போது அவற்றிலிருந்து வெளி வரும் சக்தி ஆண்களில் நெஞ்சு  சக்கரத்தின் ஊடாகவும்   பெண்களில் கண்ட  சக்கரத்தின் ஊடாகவும்  உள் வாங்கப்படுகிறது.  மேல் சட்டையை  அகற்றுவதின்  மூலம் அதிகளவு  சக்தியை  உள் வாங்க முடியும்.

மனு காலத்தில் மனித இனம்  பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகையாகப் பகுக்கப்பட்டது.  இதில் பிராமணர், சத்திரியர், வைசியர் மூவரும் ஒன்றிற்கொண்டு  வித்தியாசமான புனித நூல்களை  அணியும் பக்கத்தை கொண்டு இருந்தனர்.  முன்னைய காலங்களில்  மக்கள் குலத்தொழிலை மேற்கொண்டு வந்தனர்.  அதனால் அவர்கள்   செய்யும் தொழில் மற்றும் அதனுடன் சார்ந்த தூய்மை  என்பன காரணமாக அவர்களுக்கு கோயிலினுள் வெவ்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.   மேல் சட்டையை  அகற்றுவதின்  மூலம் பூசகருக்கு பிரித்து அறிந்து கொள்ளவும் இலகுவாக இருக்கும். 

நாம் பின்பற்றி வரும் வழமைகளால்  பாதகம் எதுவும் ஏற்படாதவிடத்து   அவற்றை தொடர்ந்து பின் பற்றுவதால் எமக்கு இழப்பு எதுவும் இல்லையே?